சோமாலியாவில் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறார்கள் போசாக்கின்மையால் உயிரிழக்கும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
வறட்சி மற்றும் மோதல்கள் காரணமாக ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
சோமாலியாவின் இரண்டு பிராந்தியங்களில் வாழும் மக்கள் முழுமையாக பட்டினியால் பாதிக்கப்படுவார்களெனவும் கணிக்கப்பட்டுள்ளது.
Baidoa மாவட்டத்தில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கான முகாம்களில் ஐ.நா முகவர் அமைப்பு மற்றும் ஏனைய மனிதாபிமான அமைப்புகளால் நடத்தப்பட்ட ஆய்வுகளில் நிலைமை மேலும் மோசமடைகின்றமை தெரியவந்துள்ளது.
6 வயது முதல் 59 மாதங்களுக்கு இடைப்பட்ட 98 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறார்களில் 59% சிறார்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments