Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

கனடாவில் கோரவிபத்தில் உயிரிழந்த யாழ் சகோதரர்கள்; பொலிஸார் வெளியிட்ட புதிய தகவல்...!

கனடா வாகன விபத்தில் யாழ்ப்பாணம்- இனுவிலை சேர்ந்த இரு தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ட்ரக் வாகன சாரதிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் 21 வயதான ஆண் ஒருவரும் 23 வயதான பெண் ஒருவரும் உயிரிழந்திருந்தனர். மார்கம் வீதி மற்றும் எல்சன் தெருவில் மூன்று பயணிகளுடன் பயணித்த கார் ஒன்றின் மீது டிரக் வண்டி மோதி விபத்துக்குள்ளாகியிருந்தது.

இருவர் உயிரிழப்பு

இதில் 21 வயதான மகனும், 23 வயதான மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 52 வயதான தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ட்ரக் வாகன சாரதியான 46 வயதான ஆண்டனி பாக்லியேரிக்கு எதிராக மரணம் மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் யோர்க் பிராந்திய பொலிஸாரால் முன்வைக்கப்பட்டது.

இதன்படி, எதிர்வரும் 29 ம் திகதி காலை, 9:30 மணிக்கு ட்ரக் வாகன சாரதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் விபத்து தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புகொள்ளுமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.

Post a Comment

0 Comments

இஸ்லாத்தின் புனித நான்கு மாதங்கள்...!