Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

வெனிசுவெலாவில் மண்சரிவு - உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு...!

 

வெனிசுலாவின் லாஸ் டெஜெரியாஸ் நகரில் மண்சரிவு காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளதோடு, 56 பேர் காணாமல் போயுள்ளனர்.

சுமார் 1,000 அவசரகால பணியாளர்கள் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

"நாங்கள் எங்களால் முடிந்தவரை காப்பாற்ற முயற்சிக்கிறோம், அன்புக்குரியவரை இழந்த அனைவருக்கும் எங்கள் இரங்கலைத் தெரிவிக்கிறோம்" என துணைத் ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மூன்று நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்துள்ளார்.



முற்றிலும் சேற்றில் மூழ்கிய தன்னார்வ மீட்புப் பணியாளர்கள், குப்பைகளை அகற்றும் போது குளவிகளால் தாக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர். புகைப்படம் ; ரொய்ட்டர்ஸ்

உயிரிழந்தவர்களில் இரண்டு சிறு குழந்தைகளும் உள்ளடங்குவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வெனிசுலாவில் கராகஸில் இருந்து 67 கிமீ (42 மைல்) தொலைவில் உள்ள லாஸ் டெஜெரியாஸ், இந்த ஆண்டு லா நினா வானிலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

லா நினா (La - Nina) என்பது இயற்கையாக நிகழும் நிகழ்வாகும், பசிபிக் பகுதியில் கடலின் அடிப்பகுதியில் இருந்து குளிர்ச்சியான, ஆழமான நீரைக் கொண்டுவருவதற்காக பூமத்திய ரேகை காற்று வலுவடையும் போது லா நினா உருவாகிறது. லா நினா காரணமாக பொதுவாக ஆசியா, ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா ழுவதும் இந்த குளிர்காலத்தில் வெப்பநிலை இயல்பை விட குளிர்ச்சியாக இருக்கும்.

Post a Comment

0 Comments

இஸ்லாத்தின் புனித நான்கு மாதங்கள்...!