Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இங்கிலாந்தில் 2 இலட்சம் அரசு ஊழியர்கள் பணி நீக்கம்..?

 

இங்கிலாந்தில் சமீபத்தில் புதிய பிரதமராக பதவியேற்ற லிஸ்டிரஸ் 
தற்போது அங்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.

இந்த நிலையில் இங்கிலாந்தில் 2 இலட்சம் அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அரசு ஊழியர்களை வேலை நீக்கம் செய்து அரசுக்கான செலவை குறைக்க பிரதமர் லிஸ் டிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரிட்டன் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனமான இன்ஸ்டிடியூட் பார் பிஸ்கல் ஸ்டடீஸ் என்ற அமைப்பு, இங்கிலாந்தை கடனில் இருந்து மீட்க அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் 5 பில்லியன் பவுண்ட் சேமிப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் அரசுக்கான செலவுகளை குறைக்கும் ஒரு பகுதியாக அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மாத்திரம் சுமார் ஒரு இலட்சம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் மற்ற ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இருக்காது என்றும் தெரிகிறது.

அடுத்த ஆண்டிலும் பண வீக்கம் அதிகரித்தால் மேலும் ஒரு இலட்சம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் லிஸ் டிரஸ்சின் இந்த நடவடிக்கையால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Post a Comment

0 Comments

இஸ்லாத்தின் புனித நான்கு மாதங்கள்...!