புரோநைட் செஸ் அகடமி அமைப்பினால் கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கிடையில் நாடாத்தப்பட்ட தனியாள் சதுரங்க சம்பியன்சிப் போட்டியில் ஆண்களுக்கான 15 வயது பிரிவில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவன் ஐ.கே.எம். ஆகில் கான் முதலாவது இடத்தைப்பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டதோடு, எம்.எஸ்.எம். மிஜ்வாத் இரண்டாவது இடத்தையும், எம்.இஸட்.எம். ஸனீப் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
ஆண்களுக்கான 18 வயது பிரிவில் ஐ.எம். சயான் ஸாஹி முதலாவது இடத்தைப்பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments