ட்விட்டர் பணியாளர்களின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைப்பதுதான் புதிய உரிமையாளரான எலான் மஸ்க்கின் முதல் நடவடிக்கையாக இருக்கக்கூடும் எனக் கடந்த வாரம் முதலே செய்திகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருந்தன.
அந்தச் செய்திகள் அனைத்தும் உண்மைதான் என்பது நேற்று நிரூபணம் ஆனது. எதிர்பார்த்ததை விடவும் மிக வேகமாகப் பலருக்குப் பணி நீக்க உத்தரவு அனுப்பப்பட்டது.
அதிகாலை 4 மணியளவில் அனுப்பப்பட்ட இந்த இமெயில் ட்விட்டரின் கட்டமைப்புகளை அணுகும் வசதி, ஸ்லாக் மற்றும் அதிகாரப்பூர்வ இமெயில் ஆகியவற்றை அணுகும் வசதி தடை செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதிகாலை 4 மணியளவில் அனுப்பப்பட்ட இந்த இமெயில் ட்விட்டரின் கட்டமைப்புகளை அணுகும் வசதி, ஸ்லாக் மற்றும் அதிகாரப்பூர்வ இமெயில் ஆகியவற்றை அணுகும் வசதி தடை செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
உலகம் முழுவதும் ட்விட்டரில் பணியாற்றி வந்த பணியாளர்களை எந்த முன்னறிவிப்புமின்றி இப்படி திடீரென பணி நீக்கம் செய்யும் எலான் மஸ்க்கின் நடவடிக்கைக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து ஏன் இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதற்கு விளக்கமளித்திருக்கிறார் எலான் மஸ்க்.
" நிறுவனத்துக்கு ஒவ்வொரு நாளும் $4 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படுகிறது. ஆகவே ஆட்குறைப்பு செய்வதைத்தவிர வேறு வழியில்லை. அவர்களுக்கு மூன்று மாதங்களுக்கான பணி நீக்க ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. இது சட்டப்படி தேவைப்படுவதை விட 50% அதிகமானது" என்று தனது தரப்பு விளக்கத்தை ட்வீட் செய்திருக்கிறார்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் ட்விட்டர் நிர்வாகத்தில் 250 முதல் 300 பேர் வரை பணியாற்றி வந்ததாகவும் கிட்டத்தட்ட அவர்கள் அனைவருமே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
0 Comments