பாகிஸ்தானில் முன்னாள் பிரதமரும், பிடிஐ கட்சி தலைவருமான இம்ரான் கான் உள்ளிட்டவர்களை துப்பாக்கியால் சுட்ட நபரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இம்ரான் கான் நேற்று (03) பஞ்சாப் மாகாணத்தின் வசிராபாத்தில் அரசுக்கு எதிராக பேரணி நடத்தினார்.
திறந்த வாகனத்தில் ஆதரவாளர்களுடன் அவர் சென்றபோது ஒரு நபர் திடீரென அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் இம்ரான் கானின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் லாகூரில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். துப்பாக்கி சூடு நடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்திய வாலிபர், யாரும் தன்னை தூண்டிவிடவில்லை என்றும், இம்ரான் கான் மக்களை தவறாக வழிநடத்துகிறார் என்ற கோபத்தில் அவரை கொல்ல விரும்பியதாகவும் கூறியுள்ளார்.
0 Comments