Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

பிரிட்டன் பிரதமருக்கு ஆளும் கட்சியில் எதிர்ப்பு வலுக்கிறது...!


பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

பிரிட்டன் உள்துறை அமைச்சர் சுவெல்லா பிரவெர்மன் பதவி விலகி, பாராளுமன்றத்தில் ஷெல் கேஸ் தொடர்பான வாக்கெடுப்பில் கன்சர்வேட்டிவ் எம்.பிக்கள் வெளிப்படையாக மோதலில் ஈடுபட்ட நிலையில் பிரதமர் லிஸ் ட்ரஸ் தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள போராட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

பிரவெர்மனின் பதவி விலகல் மூலம் டிரஸ் ஒரு வாரத்திற்குள் தனது அமைச்சரவையில் இரு சிரேஷ்ட உறுப்பினர்களை இழந்துள்ளார். அவரது தலைமைக்கு இவர்கள் ஆதரவளிக்கவில்லை.

பிரதமர் லிஸ் டிரஸ் பதவி விலக வேண்டும் என்று ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில், பதவி விலகிய பிரவெர்மன், பிரதமர் லிஸ் டிரஸின் அரசாங்கம் குறித்துத் தமக்குச் சில ஆழ்ந்த கவலைகள் ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

லிஸ் டிரஸைப் பதவியில் அமர்த்தியவர்களைத் ‘திறமை இல்லாதவர்கள்’ என பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், குறிப்பிட்டுக் குறை கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் (19) புதன்கிழமை இடம்பெற்ற வாக்கெடுப்பில் அரசு வெற்றியீட்டியபோதிலும் ஆளும் கட்சியின் 40 எம்.பிக்கள் வாக்களிப்பதை தவிர்த்துள்ளனர்.

இது ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவை வெளிப்படையாக காண்பிப்பதாக அமைந்தது.

பதவிக்கு வந்து 6 வாரங்களே கடந்திருக்கும் நிலையில் கடந்த செப்டெம்பர் 23ஆம் திகதி இடைக்கால வரவுசெலவுத் திட்டம் ஒன்றை முன்வைத்தது தொடக்கம் டிரஸின் பதவிக்கு ஆளும் கட்சிக்குள் எதிர்ப்பு வலுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

இஸ்லாத்தின் புனித நான்கு மாதங்கள்...!