இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான அதானி குழுமம், இதுவரை தொலைத்தொடர்பு சேவையில் இறங்வில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் அதானி குழுமம் பங்கு பெற்றது.
அதில் அதானி குழுமம் 20 ஆண்டுகளுக்கு ரூ.212 கோடியில் 400மெகா ஹெட்ஸ் அலைக்கற்றையை 26ஜிகா ஹெட்ஸ் மில்லிமீட்டர் வேவ் பேண்டில் பயன்படுத்துவதற்கான உரிமத்தை ஏலம் மூலம் பெற்றது. இதனால் அதானி குழுமம் தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபடவுள்ளதாக அப்போது தகவல் வெளியாகி இருந்தது.
இருப்பினும் இதற்கு விளக்கம் அளித்த அதானி குழுமம், தங்களது விமான நிலையம் மற்றும் துறைமுக தேவைகளுக்காக இதனை பயன்படுத்த உள்ளதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவையை வழங்கும் நோக்கில் அதானி குழுமம் கடந்த திங்கள் கிழமை உரிமம் பெற்றுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பினும் தற்போது வரை இது தொடர்பாக அதானி குழுமம் விளக்கம் அளிக்கவில்லை. உலகின் தற்போது 4-வது பெரிய பணக்காரரான அதானியின் இந்த தொலைத்தொடர்பு வருகை மற்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments