Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

“எடப்பாடியாரே முதல்வராக இருக்கலாம் என மக்கள் நினைக்கின்றனர்” - அதிமுக எஸ்.பி. வேலுமணி...



யாரையும் கட்டுப்படுத்த முடியாத முதலமைச்சராக ஸ்டாலினும், முதல்வருக்கு கட்டுப்படாதவர்களாக அவர்களது கட்சியினரும் உள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. 51-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கோவை புறநகர் தெற்கு வடக்கு மாநகர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், பி. ஆர். ஜி.அருண், ஜெயராமன், கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கட்சியின் 51-வது ஆண்டு விழாவையொட்டி கட்சி நிர்வாகிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து எம்.எல்.ஏ.-களிடம் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி ஆலோசனை கூட்டத்தில் அறிவுரை வழங்கினர். இந்தக் கூட்டத்தில் சுமார் 300 பேர் கலந்து கொண்டிருந்தனர். கூட்டத்திற்குப் பின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், கோவையில் சாலைகளைக்கூட தி.மு.க.வினர் முறையாக பராமரிக்கவில்லை என குற்றச்சாட்டினார். மக்கள் தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்து விட்டதாக கூறினார். “ஒவ்வொரு குடும்பத்திலும் அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்கள் இருக்கின்றது. தி.மு.க. முதல்வர் ஸ்டாலின் எந்தத் திட்டத்தையும் கொண்டு வரவில்லை.

கோவையில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை அ.தி.மு.க. கொடுத்தது. இப்போது கோவையில் எந்த சாலையிலும் மக்கள் செல்லமுடியாத நிலை இருக்கின்றது. மாநகராட்சி, நெடுஞ்சாலைகள் மோசமாக இருக்கின்றது. இந்த ஆட்சிமாற வேண்டும். மக்கள் இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப முடிவு செய்துவிட்டனர்.



நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெல்லும். எடப்பாடியாரே முதல்வராக இருக்கலாம் என மக்கள் நினைக்கின்றனர். இங்கே எப்போதும் இரு மொழி கொள்கைதான். தமிழகத்தில் இந்தி விவகாரத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை என பா.ஜ.க தலைவர் தெளிவுப்படுத்தியுள்ளார். பா.ஜ.க தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தி இருக்கின்றது.

தி.மு.கவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தியை எடுக்கச் சொல்ல வேண்டும். நாளைக்கு கோவை வரும் மத்திய விவசாயத்துறை அமைச்சரை சந்தித்து, உரம், கொப்பரை தேங்காய் விவகாரம் குறித்து மனு அளிக்கப்படும். 39 எம்.பி.க்கள் எதுவுமே செய்யவில்லை. காவிரி பிரச்சினைக்காக நாடாளுமன்றத்தை அ.தி.மு.க.வினர் முடக்கினர். இப்போது இருக்கின்ற எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் சீட்டை தேய்த்துவிட்டு வருகின்றனர்.

யாரையும் கட்டுப்படுத்த முடியாத முதல்வராக ஸ்டாலின் இருக்கின்றார். முதல்வருக்கு கட்டுப்படாதவர்களாக அந்த கட்சியினரும் இருக்கின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

இஸ்லாத்தின் புனித நான்கு மாதங்கள்...!