Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

சீனாவில் மொழிபெயர்ப்பு சேவையை நிறுத்தியது கூகுள்...!


சீனாவில் மொழிபெயர்ப்பு சேவையை நிறுத்துவதாக கூகுள் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் தொடர்ந்து பல சேவைகளை புதிது புதிதாக அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கும் கூகுள், மக்கள் தொகை அதிகம் கொண்ட ஒரு நாட்டிற்கான மொழிபெயர்ப்பு சேவையை நிறுத்தியிருக்கிறது.

சீனத்தில் தற்போது மொழிபெயர்ப்பு சேவையை நிறுத்தியிருப்பது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

கூகுள் சேவைகளை Hack செய்வது, சீனத்தில் இருக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கூகுள் அளிக்கும் சேவைகளை விட மிகச் சிறப்பான சேவையை வழங்குவது உள்ளிட்ட காரணங்களால் சீனாவில் கூகுள் சிறப்பான இயக்கத்தை வெளிப்படுத்த முடியாமல் போனதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், 2017ஆம் ஆண்டு சீனத்தில் தொடங்கப்பட்ட கூகுள் மொழிபெயர்ப்பு சேவையை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.

குறைவான பயன்பாட்டினால் கூகுள் தனது சேவையை நிறுத்திக்கொண்டுள்ளது. சீன மொழியை மொழிபெயர்ப்பதில் கூகுளை விடவும் உள்நாட்டு செயலிகள் சிறப்பாக செயற்படுவது இதற்கு காரணமாகவும் இருக்கலாம்.

Post a Comment

0 Comments

இஸ்லாத்தின் புனித நான்கு மாதங்கள்...!