Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

கண்டுக்காமல் விடாதீங்க! - பெண்களுக்கு முன்கூட்டியே தெரியுமாம் மாரடைப்பின் இந்த அறிகுறி...!

 Research-says--40--of-Woman-can-notice-a-particular-symptom-before-heart-attack

மாரடைப்பு என்பது 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் வயதானவர்களுக்குத்தான் வரும் என நிலவிவந்த கருத்து சமீபகாலமாக மாறியிருக்கிறது. அதற்கு காரணம் அடிக்கடி நாம் கேள்விப்படும் இளம்வயது மாரடைப்பும், மரணங்களும்தான். 

பெண்களைவிட ஆண்களுக்குத்தான் மாரடைப்பு அதிகம் வருமென்றாலும், 50% பெண்கள் தங்களுக்கு மாரடைப்பு வந்ததே தெரியாமல் இருக்கிறார்கள் என்கிறது ஆய்வு. நிறைய நேரங்களில் பெண்கள் தங்களுக்கு வரும் மாரடைப்பை மன பதற்றம் அல்லது நெஞ்செரிச்சல் என்றே நினைத்துவிடுகின்றனர். ஆனால், 40% பெண்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கான ஒரு குறிப்பிட்ட அறிகுறி கட்டாயம் தென்படும் என்கிறது ஆய்வு.

சர்குலேஷன் ஜர்னலில் வெளியான அறிக்கையில், மாரடைப்பு மற்றும் அஜீரணக்கோளாறு பிரச்னைக்காக தொடர்பு குறித்து விளக்கப்பட்டுள்ளது. அதாவது, மாரடைப்பு வருவதற்கு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பே அஜீரணக்கோளாறு பிரச்னை இருக்குமாம்.

மாரடைப்புடன் தொடர்புடைய அஜீரணம் எப்படி இருக்கும்?

பல்வேறு விதமான காரணங்களால் ஒருவருக்கு அஜீரணக்கோளாறு ஏற்படலாம். ஆனால் அதை எப்போதும் ஒரே மாதிரி நினைத்து அசால்ட்டாக விட்டுவிடக்கூடாது. உணவு சாப்பிட்ட பிறகோ அல்லது பானங்களை குடித்தபிறகோ, அஜீரணப் பிரச்னைக்கான சில அறிகுறிகள் தென்பட்டால் அதனை கவனிக்க வேண்டும்.

1. ஏப்பம்
2. வாயுத்தொல்லை
3. வயிறு உப்பியதுபோன்றோ அல்லது நிறைவாகவோ இருத்தல்
4. நெஞ்செரிச்சல்
5. உடல்நலமின்மை
6. வாயில் கசப்புணர்வு

image

பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான ஆரம்பகட்ட அறிகுறிகள்:

மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு மாதம் முன்பு...

1. அஜீரணம் - 39%
2. மூச்சுத்திணறல் - 42%
3. பதற்றம் - 36%
4. அசாதாரண சோர்வு - 71%
5. தூக்கத்தில் தொந்தரவு - 48%

மாரடைப்பின்போது,

1. குளிர்ந்த வியர்வை - 39%
2. மயக்கம் - 39%
3. பலவீனம் - 55%
4. மூச்சுத்திணறல் - 58%
5. அசாதாரண சோர்வு - 43%

image

மாரடைப்பின் அபாயத்தைக் குறைப்பது எப்படி?

1. உடற்பயிற்சி
2. ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்தல்
3. புகைப்பிடித்தலை கைவிடுதல்
4. ஆரோக்கியமான உணவு
5. எடை கட்டுப்பாடு
6. மதுப்பழக்கத்தை கைவிடுதல்
7. கொழுப்பு அளவை கட்டுப்படுத்துதல்

ஆண்கள், பெண்கள் இருவருக்குமே மேற்கூறிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது. இது மிக மோசமான விளைவுகளிலிருந்து பாதுகாக்கும். 

Post a Comment

0 Comments

இஸ்லாத்தின் புனித நான்கு மாதங்கள்...!