தமிழகம் முழுவதும் போலீசார் நடத்திய ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில் பல முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ரவுடிகளை முற்றிலும் ஒழிப்பதற்காக தமிழக காவல்துறை ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டையை தொடங்கி உள்ளது.
இந்த தேடுதல் வேட்டையில் கடந்த 24 மணிநேரத்தில் 133 முக்கிய ரவுடிகள் பிடிபட்டுள்ளனர்.
பிடிபட்ட 133 பேரில் கொலை, கொள்ளை வழக்குகளில் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்ட 15 பேர், முக்கிய ரவுடிகள் 13 பேரும் சிக்கியுள்ளனர். மேலும், பிடி ஆணை பிறப்பிக்கப்பட்ட 15 பேர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த ரவுடி வேட்டையில் பல ஆண்டுகளாக தேடிக் கொண்டிருந்தும் பிடிபடாமல் இருந்த 13 ஏ பிளஸ் ரவுடிகளையும் போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது, பிடிபட்ட மற்ற 105 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக காவல்துறையின் மின்னல் ரவுடி வேட்டை தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments