Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

பாலியில் இரவுவிடுதியில் குண்டுவெடிப்புகள் இடம்பெற்று 20 வருடங்கள் - துயரத்துடன் அவுஸ்திரேலியா நினைவு ...!

 

பாலிகுண்டுவெடிப்பின் 20வருடத்தை அவுஸ்திரேலிய மக்கள் பெரும் துயரத்துடன் நினைவுகூர்ந்துள்ளனர்.



பாலி குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட 85 அவுஸ்திரேலியர்கள் உட்பட 202 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் சிட்னியின் கூஜி கடற்கரை பகுதியில் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் கொல்லப்பட்ட 85 அவுஸ்திரேலியர்களையும் நினைகூறும் விதத்தில் 85 புறாக்கள் பறக்கவிடப்பட்டன.



பாலியின் இரண்டு இரவுவிடுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை நினைவுகூறும் வகையில் இரண்டு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

தனது சகாக்கள் ஐவருடன் கொல்லப்பட்ட கூஜி டொல்பின் ரக்பி கழக வீரர் ஜெரார்டின் சகோதரர் போல் யியோ நினைவு நிகழ்வில் உரையாற்றியுளளார்.



தனது சகோதரர் குறித்த துயரத்தை தனது தந்தையிடம் தெரிவிப்பதற்காக தந்தையை தொடர்புகொண்ட அந்த நிமிடத்தை அவர் விபரித்துள்ளார்.

ஒரு சில நிமிட மௌனத்தின் பின்னர் தந்தை கதறியழ தொடங்கினார் என அவர் தெரிவித்துள்ளார்.

டொல்பின் கழகம் தனது உறுப்பினர்கள் ஆறுபேரை இந்த குண்டுவெடிப்பில் இழந்தது.



குண்டுவெடிப்பில் தனது 15 வயது மகளை இழந்த டேவ் பைரொன் என்பவரும் உரையாற்றியுள்ளார்.

பாலிக்கு செல்வதற்காக அந்த வருடம் தான் வாங்கிய சேர்ட்டை அணிந்தவண்ணம் உரையாற்றிய அவர் நான் இன்றைய நிகழ்விற்கு வருவதற்கு எண்ணியிருக்கவில்லைஇ நான் இன்று காலை கண்விழித்தபோது மரணம் போல உணர்ந்தேன் என தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனிஅல்பெனிஸ் இரட்டை குண்டுவெடிப்பில் எதிர்காலம் களவாடப்பட்டவர்களை நினைவுகூர்ந்துள்ளார்.

பல அவுஸ்திரேலியர்கள் கொல்லப்படுவதற்கு காரணமான இந்த குண்டுவெடிப்பை திட்டமிட்டவர்களை பிரதமர் கண்டித்துள்ளார்.

பயங்கரம் இடம்பெற்ற இடத்தில் உள்ள நண்பர்கள் மற்றும் முன்னர் அறியாதவர்களிற்கு உதவுவதற்காக விரைந்த மக்கள் துணிச்சலையும் தன்னமலற்ற தன்மையையும் வெளிப்படுத்தினார்கள் மக்களின் மிகச்சிறந்த குணஇயல்பு வெளிப்பட்டது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அந்த இரவு பயங்கரவாதிகளால் தங்கள் நோக்கத்தை அடையமுடியவில்லை எனவும் அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.

கான்பெராவில் இடம்பெற்ற நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் உயிர்தப்பியவர்கள் முதலில் உதவி செய்தவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களை வரவேற்றுள்ளார்.

அந்த பயங்கரமான இரவின் பின்னர் 20 வருடங்கள் கடந்து விட்டன - 20 வருடத்திற்கு முன்னர் 202 உயிர்கள் அநாகரீகமான முறையில் பறிக்கப்பட்டன என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.



88 அவுஸ்திரேலியர்களும் 38 இந்தோனேசியர்களும் 20 வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் கொல்லப்பட்டனர் - இன்று நாங்கள் எங்களிடமிருந்து எடுக்கப்பட்டதை நினைவுகூறுகின்றோம்இநாங்கள் இழந்ததை நினைகூறுகின்றோம் என தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக நாடு திரும்பியிருந்தால் என்ன என நினைக்கின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.



தாக்குதலை மேற்கொண்டவர்கள் அவுஸ்திரேலியாவையும் இந்தோனேசியாவையும் பிளவுபடுத்த முயன்றனர் இரண்டு பெரும் ஜனநாயகங்களிற்கு மத்தியிலான உறவை சிதைக்க முயன்றனர்- அன்றைய இரவின் கதை என்பது பெரும் வீரம் மீள் எழுச்சியின் கதை எனவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

இஸ்லாத்தின் புனித நான்கு மாதங்கள்...!