சூடானில் 2 நாட்களாக 2 குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட நிலத்தகராறு தொடர்புடைய மோதலில் 150 பேர் வரை கொல்லப்பட்டு உள்ளனர்.
சூடான் நாட்டின் தெற்கே புளூ நைல் மாகாணத்தில் பழங்குடியின மக்கள் பல பிரிவுகளாக வசித்து வருகின்றனர். இதில், ஹவுசா பிரிவு மக்களுக்கும் வேறு சில குழுக்களுக்கும் இடையே நிலம் பகிர்வில் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் கடந்த வாரம் மோதி கொண்டனர். இந்த சம்பவம் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்தது. இதில், 2 நாட்களாக 2 குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட நிலத்தகராறு தொடர்புடைய மோதலில் 150 பேர் வரை கொல்லப்பட்டு உள்ளனர்.
இதில், தலைநகர் கார்ட்டூம் நகரில் இருந்து தெற்கே 500 கி.மீ. தொலைவில் உள்ள ரோசிரெஸ் பகுதியருகே, வத் அல்-மஹி என்ற இடத்தில் மோதல் ஏற்பட்டு உள்ளது.
இந்த மோதலில், நேற்றும் இன்றும் என இரண்டு நாட்களில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என மொத்தம் 150 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 86 பேர் வன்முறையில் காயமடைந்து உள்ளனர்.
இதனை அல்-மஹி பகுதியில் உள்ள மருத்துவமனையின் தலைவரான அப்பாஸ் மவுசா உறுதிப்படுத்தி உள்ளார். அந்த பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் நேற்று தீவிர துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியும், வீடுகளுக்கு தீ வைத்தும் வன்முறையில் ஈடுபட்டனர்.
0 Comments